Home Srilanka திடீரென இடமாற்றப்பட்டுள்ள ஜாலிய சேனாரத்ன- வெளியான பின்னணி

திடீரென இடமாற்றப்பட்டுள்ள ஜாலிய சேனாரத்ன- வெளியான பின்னணி

பொலிஸ் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை சுயாதீன தேசிய பொலிஸ் ஆணைக் குழு பிறப்பித்துள்ளதுடன், வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக, இடமாற்றுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது கடமைகளைச் செய்யும் பொறுப்பு, பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விவகாரத்தில் இவர் வெளியிட்ட கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டன.

இது தொடர்பில் நாடாளுமன்றில் உள்ளக பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் அதிருப்தி வெளியிட்டதுடன் பொலிஸ் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதன் பின்னணியிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த நுவன் வெதிசிங்க காலி பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ஈ.எம்.யூ.வி. குணரத்ன சூழல் பாதுகப்பு பிரிவின் பிரதானியாகவும், பொலிஸ் சுற்றுலா பிரிவின் பிரதானியாக இருந்த கே.வி.டி.ஏ.ஜே.கரவிட்ட பொலிஸ் அபிவிருத்தி பிரிவின் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டிருந்த லால் செனவிரத்ன தற்போது பொலிஸ் சுற்றுலா பிரிவுக்கும் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ஏ.பி.ஜே. சந்திரகுமார பொலிஸ் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கும், பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த மனித வள முகாமைத்துவ பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெற்றிடமாகியுள்ள வன்னி பிராந்தியத்துக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர குமார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகம் படித்தது

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...
- Advertisement -

Related News

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற...

ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கும் ‘20’ – கோட்டாபயவிற்கு பறந்த ஓமல்பே சோபித தேரரின் கடிதம்!

20வது திருத்தசட்டம் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரிய நிலைக்குள்ளாக்கும் எனத் தெரிவித்து ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது தங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 20வது...

மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி!

பொரெல்ல குழந்தைகள் மருத்துவமனையில் 2 வயதும் 6 மாதமும் உடைய குழந்தை மற்றும் அவரது தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் -19 பரவல் தடுப்பு செயல்பாட்டு மையம் இதை அறிவித்துள்ளது. குழந்தையும் தாயும்...

சிறையில் நலமுடன் இருக்கிறேன்- விரைவில் விடுதலை; சசிகலா கடிதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும் தனது விடுதலை குறித்து கர்நாடக...

தமிழ் றொக்கர்ஸ் இணையத்தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது?

திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் றொக்கேர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ் றொக்கேர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், ஹிந்தி, கன்னடம்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here