Home Srilanka தொழிலாளர் திணைக்களத்தின் அனைத்து பொது ச‍ேவைகளும் பிராந்திய அலுவலங்களூடாக!

தொழிலாளர் திணைக்களத்தின் அனைத்து பொது ச‍ேவைகளும் பிராந்திய அலுவலங்களூடாக!

இலங்கை தொழிலாளர் திணைக்களத்தின் அனைத்து பொது சேவைகளும் பிராந்திய அலுவலங்கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக சேவைகளை பெற பொதுமக்கள் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை.

திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பரவலாக்கப்படடுள்ளன.

அதன்படி பிராந்திய அலுவலகங்களிலிருந்து பொருத்தமான சேவைகளை பெறுமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -