Home Srilanka நாணயத்தாள்களில் அதிக காலம் உயிர்வாழும் கொரோனா; திடுக்கிடும் தகவல்!

நாணயத்தாள்களில் அதிக காலம் உயிர்வாழும் கொரோனா; திடுக்கிடும் தகவல்!

நாணயத்தாள்கள், தொலைபேசிகள் மற்றும் சில்வர் பாத்திரங்களில் கொரோனா வைரஸ் ஒரு மாதம் காலம் வரையில் உயிர்வாழும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸின் பாதிப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இதனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வைராலஜி ஜர்னலில் எனும் மருத்துவ இதழிலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எந்தெந்த இடங்களில், எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அவ்வப்போது முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, கொரோனா வைரஸ், நாணயத்தாள்களில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் எனவும், தொலைபேசி திரைகள் மற்றும் சில்வர் பாத்திரங்களில் 28 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் எனவும் கண்டறிப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸானது துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட கண்ணாடி மற்றும் சில்வர்கள் உள்ளிட்ட பளபளப்பான பகுதிகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி 20 டிகிரி, 30 டிகிரி மற்றும் 40 டிகிரி போன்ற வெப்பநிலைகளின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நேரடி சூரிய ஒளி கொரோனா வைரஸை விரைவாக உயிரிலிழக்கச் செய்யும் என ஏற்கவே ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

மேலும் புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வின்படி 20 டிகிரி வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வு முடிவுகளின்படி நோய் பரவலைத் தடுக்கவும், ஆபத்தை குறைக்கும் நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும் எனவும் குறித்த இதழ் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -