மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று(திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாரஹென்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வாகன அனுமதிப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் வாகன அனுமதிப்பத்திரங்களை மீள் புதுப்பிக்கும்போது, அதற்கென அபராதத் தொகை விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலையைக் கருதிற்கொண்டு, குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள பொதுமக்கள் சேவைகள், எதிர்வரும் வாரம் இடம்பெறாது என ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.