பிரதமர் நரேந்திர மோடி 100 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிடுகிறார்.
பாஜகவின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. இவர் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்து, 2001-ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மறைந்தார்.
இவரது பிறந்தநாளையொட்டி 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.