Home Srilanka மட்டக்களப்பில் அரச காணியில் அபகரிப்பு தொடர்பாக உயர் மட்டக் கலந்துரையாடல் !

மட்டக்களப்பில் அரச காணியில் அபகரிப்பு தொடர்பாக உயர் மட்டக் கலந்துரையாடல் !

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (13) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறால் செய்கை பண்ணப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட இப்பகுதியானது இறால் மற்றும் நன்நீர் மீன் வளர்ப்பிற்கு உகந்த இடம் என ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் (நெக்டா) ஏற்பாட்டில் முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவிலுள்ள சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கடந்த காலங்களில் இறால்வளர்ப்புத் திட்டத்தினை முறையாக மேற்கொள்ளாததால் அப்பிரதேச மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவர்நிலை அடைந்துள்ளதாகவும், விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பில் விமர்சனம் தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது நவீன முறையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தினூடாக சுற்றாடலுக்கும் மக்களுக்கும் பாதிப்புகள் ஏட்படாமலிருப்பதை உறுதி செய்து கொள்ளவும், அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பரிந்துரை செய்வதற்குமான விசேட நிபுனர்குழுவொன்று காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினது அறிக்கையின் பிரகாரம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை இவ்வுயர்மட்டக்குழு எடுக்கவுள்ளது.

இவ்வுயர் மட்டக் கலந்துரையாடலில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா சாணக்கியன் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திராரட்ன உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், விவசாய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.03bba889 0948 4965 8617 12ff4590f672

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here