இலங்கையில் அதிக கொரோனா வைரஸ் ஆபத்துள்ள பகுதிகளின் விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இந்த தரவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஆய்விற்கு அமைய, வவுனியா, அலவ்வ, மாவனெல்லை, விலிகமுவ, மஹஓய, முன்தலம, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிக கொரோனா ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.