Home Srilanka நீண்டகாலமாக கசிப்பு விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது!

நீண்டகாலமாக கசிப்பு விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது!

பதுளை தெல்பெத்த தோட்டத்தின் கம்பியடியில் நீண்டகாலமாக சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை பதுளை குற்றத்தடுப்பு அதிகாரிகளினால் விற்பனை செய்து கொண்டிருந்த சட்டவிரோத கசிப்பு 13 போத்தல்களுடன் இன்று 16.10.2020 கைதுசெய்துள்ளனர்.

பதுளை தெல்பெத்தை தோட்டத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக தெல்பெத்தை தோட்ட மக்களால் பதுளை பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாடுகளை அடுத்து பதுளை குற்றத்தடுப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல்களின் பின் இன்று தொடர்ந்து கசிப்பு விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரை பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பதுளை குற்றத்தடுப்பு பிரின் உதவி அத்தியட்சகர் தெரிவித்தார்.kasippu2 scaled kasippu3

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -