Home Breaking News கிணற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு!

கிணற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு!

தம்புள்ளை, கலேவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

கலேவெல, ரன்வெதியாவ பகுதியில் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்தே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூன்று சிறுவர்களும் இன்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -