பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் இருக்கும் அருமையான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால் அந்த புகைப்படத்தை எடுத்தவர் அதிரடி ஆட்டக்காரர் டி-வில்லியர்ஸ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முக்கிய வீரராக இருப்பவர் டி-வில்லியர்ஸ். ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய டி-வில்லியர்ஸ் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்கு பல வெற்றிகளை அந்த அணிக்கு தேடி தந்தவர். அதுமட்டுமின்றி விராட் கோலியின் சிறந்த நண்பராகவும் உள்ளார்.
கிரிக்கெட்டை தாண்டி இவர்களது நட்பு பொது இடங்களிலும் வெளிப்பட்டது உண்டு. கடந்த ஞாயிற்றுக் கிழமை விராட் கோலி இன்ஷ்டாகிராமில் துபாயில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சூர்ய அஸ்தமனத்தின் போது இருவரும் கழுத்து வரை தண்ணீரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மிகவும் அழகாகவும், ரம்மியாமாகவும் இருக்கும் இந்த புகைப்படத்தை பலர் லைக் செய்து உள்ளனர்.
இந்த புகைப்படத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த புகைப்படத்தை எடுத்தது டி-வில்லியர்ஸ். அதையும் அவரது தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.