Home Breaking News ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கும் ‘20’ - கோட்டாபயவிற்கு பறந்த ஓமல்பே சோபித தேரரின் கடிதம்!

ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கும் ‘20’ – கோட்டாபயவிற்கு பறந்த ஓமல்பே சோபித தேரரின் கடிதம்!

20வது திருத்தசட்டம் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரிய நிலைக்குள்ளாக்கும் எனத் தெரிவித்து ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது

தங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 20வது திருத்தம் அரசாங்கத்தினை சிவில் சமூகத்தின் மத்தியில் பெருமளவிற்கு ஆதரவிழக்க செய்யும்.

ஜனாதிபதி தன்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவேண்டும்,20 திருத்தம் குறித்த மக்களின் கரிசனைகளை கருத்திலெடுக்கவேண்டும்.

இலங்கையின் ஜனநாயகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -