பொரெல்ல குழந்தைகள் மருத்துவமனையில் 2 வயதும் 6 மாதமும் உடைய குழந்தை மற்றும் அவரது தாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் -19 பரவல் தடுப்பு செயல்பாட்டு மையம் இதை அறிவித்துள்ளது.
குழந்தையும் தாயும் பொரெல்ல – வெல்லம்பிட்டியில் வசிப்பவர்கள் என மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைக்கும் தாய்க்கும் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் சந்தேகித்து அவர்களை தனித்தனியாக வைத்திருந்தனர்.
மேலும் பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.