Home Breaking News ரிசாத் பதியுதீன் எப்படி சிக்கினார்?... வெளியாகியுள்ள தகவல்கள்!

ரிசாத் பதியுதீன் எப்படி சிக்கினார்?… வெளியாகியுள்ள தகவல்கள்!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்ற பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆறு நாட்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணை இலக்கம் 02 பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்க தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதவிர, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்மையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாக வைத்தே ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -