முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை எபினேசர் பிளேஸ் பகுதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான மருத்துவர் மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெஹிவளை வீட்டில் ஒளிந்திருப்பதற்கு முன்னர், பதியூதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.