Home Srilanka ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020 அன்று முதல் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு 20.10.2020 இன்று திகதியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் தொடர்ந்தும் 03.11.2020 வரை விளக்மறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த வழக்கு 03.11.2020 அன்றைய தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா,திருமதி துஸ்யந்தி சிவகுமார்,கனகரத்தினம்.பார்த்தீபன், ஆகியோர் முன்னிலையானதுடன் எதிர்த்தரப்பில் வன்னியின் முதன்மைச் சட்டவாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

ஊடகவியலாளர்களின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் வெளியில் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் ஒளிப்படங்கள் இருந்த போதும் அவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -