வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் இந்த பரிசோதனையை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கொழும்பு புறக்கோட்டை பகுதியின் மொத்த விற்பனையாளர்களில் ஒருவருக்கு நெருக்கமான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானதை அடுத்தே, அமைச்சர் இந்த பரிசோதனையை செய்துக்கொண்டுள்ளார்.
பரிசோதனையில் அமைச்சர் பந்துலவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.