Home Lifestyle மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

மழைக்காலத்தில் சருமம் எளிதில் வறண்டுவிடும் இதனால் சருமம் சுருக்கம் அடையும், வெள்ளைத் திட்டுகளாக தெரியும் ஆரோக்கியமான சருமப் பொலிவை இழக்கக் கூடும் எனவே இவற்றை தவிற்க சில பராமரிப்பு விஷயங்களை கையாள வேண்டும் அவை என்னென்ன பார்க்கலாம்.

சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம்..

மழைக் காலத்தில் ஈரப்பதம் மிக்க மின்னும் முகத்தோற்றம் அவசியம் அதற்கு மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துங்கள் பயன்படுத்தும் மேக்அப் பொருட்களையும் க்ரீம் தன்மை கொண்டதாகப் பயன்படுத்துங்கள்

தண்ணீர் அருந்துங்கள்…

மழைக்காலத்தில் உடல் வெப்பத்தை அதிகமாக வெளியேற்றும் இதனால் உடலில் உள்ள நிர் விரைவில் வற்றத்தொடங்கும் இதை சரிசெய்ய அடிக்கடி நீர் அருந்துங்கள் மழைக்காலத்தில் தாகம் இருக்காது என்றாலும் நீங்களாகவே தண்ணீர் அருந்த நினைவுபடுத்தி அருந்துங்கள்.

வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்…

வெந்நீரில் குளிப்பதை தவிருங்கள் இல்லையெனில் உடலை கூடுதல் வறட்சியாக்கும் தேவைப்பட்டால் அதிகக் குளுமையை தணிக்க கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் கலந்து குளியுங்கள் வெந்நீரில் முகத்தைக் கழுவுவது சருமத்தில் வடியும் இயற்கையான எண்ணெய்யையும் அகற்றிவிடும்.

இரவு சருமப் பராமரிப்பு…

காலையில் எழுந்துகொள்ளும்போதே வறண்ட சருமத்தால் தெளிவில்லாமல் காணப்படும் இதை தவிர்க்க இரவில் அப்ளை செய்யக் கூடிய மாய்ஸ்சரைஸரை முகத்தில் தடவுங்கள் காலையில் முகம் ஈரப்பதத்துடன் தெளிவாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -