Home International முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை - கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பரவியிருக்கும் என அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் கூறிய கூற்றுக்கு, பதில் வழங்கும் முகமாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், என்னவாக இருந்தாலும் எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என மக்கள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சாலும், கொரோனா குறித்த செய்திகளை கேட்டும் மக்கள் சோர்வடைந்து விட்டனர்.

பேஹ்சி இங்கு 500 ஆண்டுகளாக இருந்தது போல் உள்ளார். பேஹ்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 இலட்சம் முதல் 8 இலட்சம் இறப்புகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும் என விமர்சித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், 84 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 2 இலட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -