Home Sports ரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணம்!

ரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணம்!

மெக்ஸிகோவில் ரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணமடைந்தார்.

தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் ரெஸ்லிங் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது லூயிஸ் ஏஞ்சல் என்பவர் தனது போட்டியாளரான ரெடிமிடோவை முகத்திலும் வயிற்றிலும் உதைத்தார். அப்போது அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாரான போது ரெடிமிடோ திடீரென மேடையிலேயே மயங்கிச் சரிந்தார்.

அப்போது போட்டி நடப்பதாகக் கருதிய ரெடிமிடோவின் நண்பர் ஒருவர் லூயிசைத் தாக்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் ரெடிமிடோ உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -