Home Sports லங்கா பிரீமியர் லீக்கின் 'கண்டி டஸ்கர்ஸ்' அணியை சல்மான் கான் குடும்பத்தினர் வாங்கினர்.

லங்கா பிரீமியர் லீக்கின் ‘கண்டி டஸ்கர்ஸ்’ அணியை சல்மான் கான் குடும்பத்தினர் வாங்கினர்.

சல்மான் கானின் குடும்பம் லங்கா பிரீமியர் லீக்கின் கண்டி டஸ்கர்ஸ்

அணியின் உரிமையை கொள்வனவு செய்துள்ளது.

நவம்பர் 21 ஆம் தேதி தொடங்க இருக்கும் லங்கான் பிரீமியர் லீக்கில் (LPL ) கண்டி டஸ்கர்ஸ் உரிமையை பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானின் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

சல்மான் கானின் தம்பி சோஹைல் மற்றும் தந்தை, பிரபல திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் ஆகியோர் சோஹைல் கான் Sohail Khan International LLP நிறுவனம் இதில் முதலீடு செய்துள்ளது.

இந்த லீக்கில் “நிறைய திறன்களைக் காண்கிறேன்” என்று இவர்கள் LPL தொடர்பில் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

“எங்கள் அணியில் உள்ள வீரர்கள் திறமைசாலிகள் , பொதுவாக லீக் மற்றும் ரசிகர்களின் ஆர்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாங்கள் நிறைய திறன்களைக் காண்கிறோம்,” என்று சலீம் கானின் மூன்று மகன்களில் இளையவரான சோஹைல் கான் தெரிவித்தார்.

கான் குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்களில் இளையவர் – அர்பாஸ் மற்றும் சல்மான் பெரியவர் – “கண்டி போட்டிகளில் சல்மான் கான் கலந்து கொள்வார்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘யுனிவர்ஸல் பாஸ் என அழைக்கப்படும் ‘ கிறிஸ் கெய்ல் இப்போது எமது அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது மிகவும் உற்சாகமாக தெரிகிறது என சோஹைல் கான் மேலும் தெரிவித்தார்.

“கெய்ல் யுனிவர்சல் பாஸ் மேன், அதனால் எங்களுக்கு ஒரு நல்ல அணி உள்ளது. குசல் பெரேரா எங்கள் உள்ளூர் திறமைசாலி மற்றும் எங்களிடம் லியாம் பிளங்கெட், வஹாப் ரியாஸ்,குசால் மெண்டிஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் உள்ளனர். இது சிறந்த அனுபவமாகும், ”என்றார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -