Home Srilanka ஓய்வூதியம் பெறுவோரிடம் நூதனக் கொள்ளை : ஏ.ரி.எம் அட்டைகளுடன் காத்தான்குடி ரெலோ நியாஸ் களுவாஞ்சிகுடி பொலிஸாரால்...

ஓய்வூதியம் பெறுவோரிடம் நூதனக் கொள்ளை : ஏ.ரி.எம் அட்டைகளுடன் காத்தான்குடி ரெலோ நியாஸ் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது

முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வங்கிகளுக்கு வருபவர்களின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பெற்று நுணுக்கமாகத் திருடி வந்த ரெலோ நியாஸ் என்பவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புறநகர்ப்பகுதி மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கடந்த 7, 8, 9ம் திகதிகளில் அரச வங்கி கிளைகளில் ஓய்வூதியம் (Pension) சம்பளத்தை ஏ.ரி.எம் அட்டையினூடாக பெற வந்த வயோதிபர்களை இலக்கு வைத்து குறித்த திருட்டு இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (22) மாலை அவர் கைதானார்.

காத்தான்குடியைப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயதுடைய இச்சந்தேக நபர் ஏலவே கண்டெடுத்த அரச வங்கி ஏ.ரி.எம் அட்டையொன்றினைப் பெற்று இளைப்பாறிய சம்பளத்தைப் பெற வருகின்ற நபரிடம் உதவி செய்வதாக பாசாங்கு செய்து, அவர்களது கணக்குப் பெறுமதியை அறிகின்றார்.

அத்துடன், உதவி கேட்ட நபரின் கணக்குப் பெறுமதியைப் பெற்றுக்கொடுப்பதுடன், அதே நேரம் வங்கி கணக்கு நிலுவையையும் அறிகின்றார். அத்துடன், தன்னிடம் ஏலவே கண்டெடுத்த ஏ.ரி.எம் அட்டையை மாற்றிக் கொடுத்து, அவர்களை வழியனுப்பி வைப்பதுடன், பின்னர் அந்த ஏ.ரி.எம் அட்டைகளை மற்றுமொரு வங்கிக் கிளைக்கு எடுத்துச்சென்று பணத்தினைப் பெற்றுக்கொள்கின்றார்.

மேற்கூறிய செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொண்டு 5 பேரிடம் இவ்வாறு ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணத்தினைப் பெற்றுத் தருவதாகக்கூறி இவ்வாறு நுதனமாக சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளதுடன், கொள்ளையடித்த பணத்தில் ஹெரோயின் போதைப்பொருளையும் கொள்வனவு செய்துள்ளார். இதனையடுத்து கண்காணிப்புக் கமராவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையாடுத்து சந்தேக நபர் கைதானார்.

பல்வேறு குற்றங்களுக்காக 11 வருடங்களாக சிறையலிருந்த குறித்த சந்தேக நபர் தொடர்பாக குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெரேரா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு சார்ஜன்ட் றவூப் மேற்கொண்ட புலனாய்வுத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பாறுக் வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி குணவர்த்தன மேற்பார்வையில் பொலிஸ் கன்டபிள்களான வீரசிங்க, பிரதீப், பிரணவன் ஆகியோர் இக்கைது நடவடிக்கையில் பங்கேற்றனர்.

கைதான சந்தேக நபரிடம் 5 ஏ.ரி.எம்.அட்டைகள், ஹெரோயின் போதைப்பொருள் 2 கிராம் 90 மில்லி கிராம் என்பன மீட்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகாக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

32dabdd2 09d6 4d51 8b32 8e5454cfc32d cecd6fe5 8f77 4d01 b6cf 27764d6f9b83

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -