Home Srilanka மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மரமுந்திரிகைக் காட்டுக்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சில நாட்களின் முன் காணாமல்...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மரமுந்திரிகைக் காட்டுக்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சில நாட்களின் முன் காணாமல் போன இளைஞன் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மரமுந்திரிகைக் காட்டுக்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சில நாட்களின் முன் காணாமல் போன இளைஞன் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(22) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு முருகன் கோயில் வீதியிலுள்ள அடர்ந்த மரமுந்திரிகைக் காட்டினுள் முந்திரிகை மரத்தில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் உருக்குலைந்த நிலையில மீட்கப்பட்டுள்ளது.

அதே வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கனகசுந்தரம் ஜதீஸ்காந்த் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.ஜீவரட்ணம் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

குறித்த இளைஞர் சில தினங்களின் முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

731c1e87 cead 457c b68f f803e074b274b0d9b43d 5921 4fd5 9345 a0ec102e299e

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -