Home India ஒரேயொரு கையெழுத்தால் தெருவுக்கு வந்த தொழிலதிபர்!

ஒரேயொரு கையெழுத்தால் தெருவுக்கு வந்த தொழிலதிபர்!

இரும்பு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல் மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார் பிரமோத் மிட்டல் தனது தந்தை, மனைவி, மகன் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் கடன்பட்டிருப்பதாகத் தெரிவித்ததையடுத்து மிகவும் திவாலான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.1603432773125276

மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்கள் தொழிலைத் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினர் லட்சுமி மிட்டலின் ஆர்சலர் மிட்டலின் தலைமையிடமாக நெதர்லாந்து உள்ளது பிரமோத் மிட்டல் இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

2006 – ம் ஆண்டு பிரமோத் மிட்டல், போஸ்னிய கோக் தயாரிப்பாளரான குளோபல் இஸ்பாட் கோக்ஸ்னா இண்டஸ்ட்ரிஜா லுகாவக் என்று நிறுவனம் பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்தார் இதிலிருந்து தான் பிரமோத் மிட்டலின் வீழ்ச்சி தொடங்கியது குளோபல் இஸ்பாட் நிறுவனம் 166 மில்லியன் டாலரை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறியது இதையடுத்து 2019 – ம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரமோத் மிட்டல் கைது செய்யப்பட்டார் இது மட்டுமல்லாமல், பிரமோத் மிட்டல், இந்தியாவிலும் மாநில வர்த்தகக் கழகத்தில் ரூ. 2200 கோடி மோசடி செய்து விசாரணையைச் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013 – ம் ஆண்டு பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ரீஷ்டியின் திருமணத்துக்காக டச்சு நாட்டைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளரான குல்ராஜ் பெஹ்ல் உடன் சேர்ர்ந்து 50 மில்லியன் பவுண்ட்ஸ்களை செலவு செய்தார் அப்போதே இது இந்திய மதிப்பில் 505 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது மகள் திருமணத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்தவர் தான் தற்போது திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திவாலாகியுள்ள பிரமோத் மிட்டல், “எனக்குத் தனிப்பட்ட வருமானம் எதுவும் இல்லை நிதி விஷயங்களைப் பொருத்தவரை என் மனைவி என்னிடமிருந்து சுதந்திரமானவள் நாங்கள் தனித்தனியாக வங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம் என் மனைவியின் வருமானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என் குடும்பம் மற்றும் மனைவியிடமிருந்துதான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ. மூன்று லட்சம் வரை பெறுகிறேன் எனது திவால் நிலைக்கான சட்ட செலவுகள் கூட மற்றவர்களால் தான் பூர்த்தி செய்யப்படுகிறது” என்று பரிதாபமாகத் தெரிவித்துள்ளார்.

திவாலான நிலையில் பிரமோத் மிட்டல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது சகோதரரும் எஃகு அதிபர் ஆர்செலர்மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான லட்சுமி மிட்டல் உலகின் பணக்காரர்களுள் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது திவாலான நிலையில் பிரமோத் மிட்டல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது சகோதரரும் எஃகு அதிபர் ஆர்செலர்மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான லட்சுமி மிட்டல் உலகின் பணக்காரர்களுள் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -