Home International நேருக்கு நேர் மோதிய அதிபர் வேட்பாளர்கள்; கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

நேருக்கு நேர் மோதிய அதிபர் வேட்பாளர்கள்; கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இறுதிக்கட்ட விவாதத்தை நாஷ்விலில் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதிப்பது அமெரிக்காவிலுள்ள மரபாக உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ட்ரம்ப் கொரோனத் தொற்றைக் கையாண்ட விதம் குறித்தும், பொதுமக்களின் இறப்புக் குறித்தும் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்தார்.

பதில் வழங்கிய ட்ரம்ப், கொரோனாவை நாம் கொண்டு வரவில்லை எனவும் அமெரிக்க மக்களை வீடுகளில் அடைக்க முடியாது எனவும் பதில் கொடுத்துள்ளார்.

இதேவேளை சீனாவிலிருந்து வந்த கொரோனாவால் பொருளாதாரம் சடுதியாக பாதிக்கப்பட்டதால் நாட்டை மீண்டும் திறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -