Home Breaking News மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்த இரா.சாணக்கியன்!

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்த இரா.சாணக்கியன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்திற்குள்  சந்தித்து மட்டக்களப்பு காணி விவகாரம் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புற காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

மேலும் , அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம், தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.625.298.560.350.160.300.053.800.522.160.90

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -