Home Srilanka 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு!

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு!

1987 ஆம் ஆண்டு அரந்தலாவை பகுதியில் இடம்பெற்ற பிக்குகளின் கொலை தொடர்பில் குற்றவிசாரணையை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை – அரந்தலாவையில் 1987 ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்த 37 பிக்குகளின் படுகொலை விடுதலை புலிகளினால் நிகழ்த்தப்பட்டது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்று 33 வருடங்களாகின்றது.

இதன்படி குறித்த படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறவும் குற்றப்பலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணை ஆரம்பித்து இரு வாரங்களில அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -