ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (23) அவசர கட்சி கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மு.கா.காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்றுக் காலை நடைபெற்றுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.