அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேரை இன்று (24.10.2020) அதிகாலை கைது செய்துள்ளதுடன் 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய திருக்கோவில் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஜெயவீரா தலைமையிலான பொலிசார் சம்பவதினமான இன்று அதிகாலையில் விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்ததுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.