தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று” இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்ற கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.
அதனால் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ஓடிடி ரிலீஸ் என்றாலும் படம் மொத்தம் 100 கோடிக்கு பிசினஸ் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெற முடியாததால் சூரரைப்போற்று படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் உருவானது இதை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் மேலும் விரைவில் ட்ரெய்லர் மற்றும் இன்னபிற விஷயங்களுடன் உங்களிடம் வருகிறோம் இந்த கடிதத்துடன் நமது நட்பு மற்றும் பிணைப்புக்காக ஒரு ‘ஃப்ரெண்ட்ஷிப்’ பாடலும் வெளியாகிறது’என்றும் குறிப்பிட்டிருந்தார்.
We got the NOC 👍🏼👍🏼👍🏼 #SooraraiPottru #AnbaanaFans Get ready for updates and new release date!! Festival of Lights 🪔🪔🪔
— Rajsekar Pandian (@rajsekarpandian) October 23, 2020
சொன்ன தேதிக்கு சூர்யா ரசிகர்கள் சூரரைப் போற்று படத்தை காண முடியாமல் வாடிக்கொண்டிருந்தனர் இந்நிலையில் தற்போது தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சூரரைப்போற்று படத்திற்கு நாங்கள் தடையில்லா சான்று பெற்றோம் புதிய ரிலீஸ் தேதி மற்றும் கூடுதல் தகவல்களுக்கு தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார் இதையடுத்து தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.