Home Lifestyle பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி- இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி- இத்தாலியில் விநோதம்!

இதற்கு முன்பு, நீங்கள் யாராவது பச்சை நிற நாயைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம், சார்டியன் வகை நாய் ஒன்று பச்சை நிறக் குட்டியை ஈன்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை நிறத்தில் காணப்படுவதால் என்னமோ அந்த நாய்க்குட்டிக்கு ‘பிஸ்டாசியோ (( Pistachio )) என்று பெயரிட்டுள்ளனர். பிஸ்தாவின் நிறத்தைக் குறிக்கும் வகையில் இப்படி பெயரிட்டுள்ளனர்.

இத்தாலியில் உள்ள சார்டினியா தீவில் வசிக்கிறார் க்ரிஸ்டியன் மல்லோச்சி. அவரது பண்ணையில் வளர்த்த ஸ்பெல்லாச்சியா என்று பெயரிடப்பட்ட நாய் அக்டோபர் 9 – ம் தேதி நான்கு குட்டிகளை ஈன்றது. அந்தக் குட்டிகளில் ஒன்றுதான் பச்சை நிறத்துடன் பிறந்துள்ளது. பச்சை நிறத்துடன் பிறந்ததால், உடன் பிறந்த மூன்று குட்டிகளை விடவும் பிஸ்டாசியோ நாய்க்குட்டி சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.

பச்சை நிற முடியுடன் நாய்க்குட்டி பிறப்பது அரிதிலும் அரிதான நிகழ்வாகும். வெளிர் நிற நாய்க் குட்டிகள் கருப்பையில் உள்ளபோது, பிலிவர்டின் எனப்படும் பச்சை நிறமியுடன் தொடர்பு ஏற்படும்போது, குட்டிகள் பச்சை நிறத்தைப் பெறுகின்றன உடலில் சிராய்ப்புகள் ஏற்படும்போது தோல் பச்சை நிறத்துக்கு மாறக் காரணமாக இருப்பதும் இதே பில்வெர்டின் நிறமிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை நிற நாய்க்குட்டி குறித்து அதன் உரிமையாளர் க்ரிஸ்டியன் மல்லோச்சி, “பிஸ்டாசியோ நாய்க்குட்டி பச்சை நிறத்துடன் பிறந்ததைப் பார்த்தபோது என் கண்ணாலேயே நம்ப முடியவில்லை. ஆனால், வளர வளர அதன் பச்சை நிறம் மங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிவரும் காலகட்டத்தில் பச்சை நிறத்தில் நாய்க்குட்டி பிறந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இது அதிஷ்டத்தின் வெளிப்பாடாகும். விரைவில் மக்களின் துயரம் நீங்கப் போகிறது. பிஸ்டாசியோ நாய்க்குட்டி அனைவரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவரும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.1603535860125420

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -