Home Breaking News பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் குற்றத்தடுப்பு பிரிவினால் கைது!

பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் குற்றத்தடுப்பு பிரிவினால் கைது!

யாழில் பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம், சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய இடங்களில் வீதிகளில் செல்வோரை தள்ளி விழுத்தி காயப்படுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த நால்வரே நேற்றைய தினம் (23) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 பவுண் நகை, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.

கடந்த மாதம் அச்சுவேலி பிரதேசத்தில் சிறு பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டை சூட்சுமமாக மாற்றிப் பயணித்தோடு மோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை காயப்படுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த சம்பவம் போன்ற ஆறுக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.122052666 3081035818790304 2139942388803072183 n 122167185 3081035852123634 6283114179023559339 n 122236155 3081035908790295 431853680047085900 n

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -