Home India மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தபோது, நேற்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.1 126

முன்னதாக, ஊரடங்கு விதிகளை மீறி 37 பேர் அந்த ஆலையில் பணிபுரிந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், காலை 10.30 மணிக்கு மேல் மணி மருந்தை பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக, பட்டாசு ஆலையின் உரிமையாளர் சண்முகராஜா, குத்தகைதாரர் வைரமுத்து, மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேர் மீது பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சண்முகராஜா தலைமறைவாக உள்ளார். வைரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தி விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -