சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள பட்டலந்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒரு இராணுவ கப்டன் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இராணுவ முகாமிற்கு மீன் வாங்குவதற்காக குறித்த கப்டன் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது..
இதனையடுத்து இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இராணுவ கப்டன் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.