Home Srilanka MPக்குஅடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

MPக்குஅடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் குடும்பத்திருடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்பில் குற்றப்பிரிவு விசாரணை செய்து வருகிறது.

ரிஷாட் பதியுதீன், இறுதியாக தெஹிவளையில் மருத்துவர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

எனினும் ரிஷாட் பதியுதீன், வர்த்தகர் ஒருவரது சொகுசு இல்லத்திலேயே இறுதியாக தங்கியிருந்தார் என்பது பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இந்நிலையில் தெஹிவளைக்கு (22) விரைந்த குற்றப்புலனாய்வு பிரிவு அங்கு தேடுதலை நடத்தியது.

இருப்பினும் இந்த வர்த்தகர் குடும்பத்துடன் அங்கிருந்து ஏற்கனவே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -