Home Srilanka அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மைத் தன்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதிகாரி பிரதமர் பங்குபற்றும் வெளிப்புற நிகழ்வுகளின் பூரண பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின்போது மாத்திரமே பங்கேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிகாரி கடந்த 17 ஆம் திகதி முதல் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -