வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
மண்ணில் புதையுண்டு காணப்பட்ட குறித்த கைக்குண்டை, சிறுவர்கள் எடுத்து விளையாடிய போதே, அது வெடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, இரணை இலுப்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.