Home Srilanka நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் நாளை முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து தூரசேவை ரயில்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்கள் ஆகியனவும் நாளை முதல் ரத்து செய்யப்பட்டவுள்ளன.

இந்த நிலையில், கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த 6 ரயில் சேவைகளும் கொள்ளுபிட்டி ரயில் நிலையம் வரை மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இருந்து பயணிக்கும் 8311 இலக்க ரயில், பெலியத்த முதல் பயணிக்கும் 8097 இலக்க ரயில், காலியில் இருந்து பயணிக்கும் 8327 இலக்க ரயில் ஆகிய ரயில்கள் இவ்வாறு நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.

கொள்ளுபிட்டி – பெலியத்த இடையிலான 8096 இலக்க சாகரிகா ரயில், கொள்ளுபிட்டி – காலி இடையிலான 8760 இலக்க சமுத்திர தேவி ரயில் மற்றும் கொள்ளுபிட்டி – காலி இடையிலான 8766 இலக்க ரயில் ஆகிய ரயில்களும் இவ்வாறு நாளை முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளன.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான விசேட ரயில் சேவைகள் மாத்திரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் 8 விசேட ரயில்களும் சிலாபம் மார்க்கத்தில் 4 விசேட ரயில்களும் குறுந்தூர சேவை அடிப்படையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்காக பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -