Home Sports Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

IPL தொடரின் 44ஆவது போட்டியில் Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Royal Challengers Bangalore அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Royal Challengers Bangalore அணி சார்பில், Virat Kohli 50 ஓட்டங்களையும், AB de Villiers 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

146 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Chennai Super Kings அணி, 18 தசம் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

Chennai Super Kings அணி சார்பில், Ruturaj Gaikwad 65 ஓட்டங்களையும், Ambati Rayudu 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக Ruturaj Gaikwad தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், IPL புள்ளிப் பட்டியலில் Chennai Super Kings அணி 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -