கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இன்று இடம்பெறவுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இலங்கையில் 16 வது கொரோனா மரணம் நேற்று பதிவானது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான ஆண் ஒருவர் இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த 23 ஆம் திகதி சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மூன்று மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.