கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா கண்டி பிரதான வீதியில் நகரசபை மைதானத்திற்கு திரும்பும் வீதிக்கு முன் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு பாரிய அளவான சேதங்கள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியின் நடுவே விபத்துச் சம்பவம் இடம்பெற்ற காரணத்தினால் ஏ9 பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.
வவுனியா போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தை சீர்ப்படுத்தும் அதேவேளை மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.