Home Srilanka கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!

கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் 16 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (26.10.2020) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை (24.10.2020) பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்களுடன் தொடர்புபட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதியாகியிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -