கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆணையாளர் ஆர்.வளர்மதி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 அச்ச நிலை காரணமாக இன்று முதல் வாகன அனுமதிப் பத்திரங்கள் ஒரு வாரத்திற்கு வழங்கப்பட மாட்டாது எனவும் ஒன்லைன் மூலமாக தமது வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் இது அமுலில் இருக்கும் எனவும் பொதுமக்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அறிவித்தல் வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.