Home Srilanka சங்கானை தனியார் வைத்திய நிலையமொன்றில் தீ விபத்து! (படங்கள் இணைப்பு)

சங்கானை தனியார் வைத்திய நிலையமொன்றில் தீ விபத்து! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்திய நிலையமொன்றில் நேற்று இரவு 7.30 மணியளவில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சங்கானைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றில் நேற்று இரவு 7 மணியளில் தீப்பற்றியெரிந்துள்ளது. அதனை அவதானித்த குறித்த மருத்துவ நிலையத்திற்கு அருகாமையில் உள்ளவர்களால் தீயை அணைப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தீ மேலும் பரவாத வகையில் கடும் போராட்டத்தின் மத்தியில் தீ பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் குறித்த தீ விபத்தினால் மருத்துவ நிலையத்தில் இருந்த மருந்துப் பொருட்கள் மற்றும் மின் சாதனங்கள் என பெறுமதியான பொருட்கள் குறித்த தீ விபத்தினால் முற்றாக எரிந்துள்ளது.

குறித்த தீ விபத்தானது மின் ஒழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.2

1 1

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -