Home Spiritual தொற்று நோய்களில் இருந்து விடுபட மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள்- மகா யோகி உரைக்கும்...

தொற்று நோய்களில் இருந்து விடுபட மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள்- மகா யோகி உரைக்கும் உபாயம்!

தர்மம் நிறைந்த மனிதர்களே உங்கள் தலைவன் யார்? என்று கேழுங்கள் துன்பம் நிறைந்த உலகினிலே அவ் உண்மை அறிந்தால் நீங்களும் கடவுளே….என்று அகத்திய பகவானின் நேரடி சீடர் கண்ணையா யோகி மகரிஷியினாலும் அவரையடுத்து அவரது மாணவர் காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளினாலும் இவ்வுலகம் பல எதிர் விளைவுகளை சந்தித்த போதெல்லாம் அதனை தமது ஆத்ம சக்தியால் தடுத்து நிறுத்தி உலகில் அவ்வப்போது ஏற்படும் தளம்பலினை சமப்படுத்தி உலக மக்கள் இன்ப வாழ்வு வாழ்வதற்கு வழி வகுத்தார்கள்.   

அவர்களை அடுத்து வாழையடி வாழையாக குரு மார்க்கத்திலே வந்துதித்தவர்தான் தற்போது ஸ்தூல சரீரத்தோடு இவ்வுலகிலே மக்களோடு மக்களாக இருந்து கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து காட்டி போதித்தருளும் காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளின் ஆத்ம மாணவர் மகா யோகி ஆன்மீகக் குரு புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஆவார்.DSC 0064

சுவாமிகளின் ஆன்ம வழிகாட்டல்கள் இவ் உலகிற்கு அரு மருந்தாகவும் மனித சமுதாயத்தினை சத்திய யுகத்தினை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் மிளிர்கிறது எனலாம்.

மனிதனுக்கு இவ்வுலகில் நோய்ப் பிணி, பசிப்பிணி என்பவை ஏன் ஏற்படுகின்றன அவற்றையெல்லாம் வென்றிட எமது மூதாதையர்களான சித்தர்கள், யோகிகள், மகரிஷிகள் காண்பித்த விடயங்களும் அவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறைகளையும் உலகினை அல்லலுறச் செய்கின்ற தொற்று நோய்களை எதிர் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தம்மை மனிதர்கள் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை பற்றியும் சுவாமிகளால் அருளப்பட்ட உபதேசத்தினை தொகுத்து வழங்குகிறோம்.

பிரபஞ்சம் என்பதனை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று மகா பிரபஞ்சம் அடுத்தது மினி பிரபஞ்சம் ஆகிறது மகா பிரபஞ்சம் பஞ்ச பூதங்கள்  அனைத்தையும் உள்ளடக்கியதாக பரப்பிரம்மமாக காணப்படுகிறது அதுவே மினி பிரபஞ்சமாக பஞ்ச பூத தத்துவத்தினை அடிப்படையாக கொண்ட பஞ்ச புலன்களினூடாக மனிதர்களை இயக்கும் சக்தியாக செயற்படுகிறது இதனை உணர்த்தவே ஸ்ரீ இராம கிருஸ்ண பரமஹம்சர் கூறுகிறார் ” சக்திதான் பிரம்மம் பிரம்மம்தான் சக்தி” என்று அதாவது உலகினை பிரம்மமாக வீற்றிருந்து இயக்கும் மகா சக்தி மனித சரீரங்களில் சக்தியாக வீற்றிருந்து அவர்களை இயக்குகிறது இவ் உண்மையினை மனிதர்கள் உணரும் நிலை எப்போது ஏற்படுகிறதோ அன்று மனிதர்கள் தான் வேறு இறைவன் வேறல்ல எனும் உயர் நிலைக்கு சென்று விடுகிறார்கள் அதாவது இதனை பிரம்ம சாட்சாத்கார நிலை என்கிறார்கள்.

அவ்வாறு அந்த நிலையினை அடைந்த மகா யோகிகள் ஞானிகள் தாம் அடைந்த நிலையினை பிரபஞ்சவாசிகளும்  அனுபவித்திட வேண்டும் எனும் தர்ம சிந்தனையுடன் அவர்களது துன்பமற்ற வாழ்விற்காக உலகில் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போது தர்மத்தினை நிலை நாட்டுவதற்கும் அதர்மத்தினை அழிப்பதற்குமாக பரிகாரங்களை உரைத்துள்ளார்கள்.

மனிதர்களது மூல சக்தியாக விளங்கும் ஆத்ம சக்தி குறைவடையும் போது பல பிணிகள் அவர்களை தாக்குகிறது அதனால் இவ்வுலகம் பலவிதமான தொற்று நோய்களையும் மரணங்களையும் கடந்து வந்துள்ளது என வரலாறுகள் மூலம் அறியக் கிடைக்கிறது.

இவையெல்லாம் ஏன் நிகழுகிறது…

இங்குதான் மனிதர்கள் ஆளமாக சிந்தித்து தெளிவினை பெற வேண்டும் ஏனெனில் பகுத்தறிவு எனும் சிந்தித்து தெளிவடையும் ஆற்றல் மனிதனுக்குள் இருக்கும் மிகப் பெரிய சக்தியாகிறது ஆனால் அதனை மனிதர்கள் பயன்படுத் தவறி விடுகிறார்கள் ஏன் பயன்படுத்த இயலவில்லை என்று நோக்குவோமானால் அவர்களுக்குள் ஏற்படும் பயம் மனதிலே சலனத்தினை உண்டு பண்ணுவதால் மனம் கலங்கிய குட்டையாகி விடுகிறது அதனால் அவர்களது புத்தி மழுங்கடிக்கப்படுகிறது எனவே அவர்கள் செயலும் கலக்கத்தில் நிறைவடைகிறது இதே கலக்கம் பலருக்கும் உண்டாகும் போது அது சமூகத்தின் கலக்கமாகி எங்குமே அமைதியின்மை எனும் விடயம் பெரும் உருவெடுத்து விடுகிறது.

சக்திதான் பிரம்மம் பிரம்மம்தான் சக்தி எனப்படும் போது மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கமானது பிரபஞ்சத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணுமென்பதனை உணர முடிகிறதல்லவா அதனால்தான் இயற்கை சீற்றங்களும் கொடிய தொற்று நோய்களும் பேரவலங்களை மனிதர்களுக்கு உண்டாக்கி விடுகின்றன.

தம்மால்தான் தனக்கும் தரணிக்கும் கேடு விளைகிறது “தன்னை உணர்ந்தவனுக்கு தரணியில் ஏது கேடு” என்பதனை மனிதர்கள் இயற்கை சார்ந்து வாழும் போது இயற்கை தனக்கு எவ்வித துன்பத்தினையும் தருவதில்லை இயற்கைக்கு எதிரான  காரியங்களில் தாம் ஈடுபடுவதன் மூலமாக தனக்கும் தன் மூலம் உலகிற்கும் தீமை விளைகிறது என்பதனை இந்த நவீன யுகத்தில் மனிதர்கள் புரிந்து கொண்டு இயற்கை சார்ந்து வாழ பழகிக் கொண்டார்களானால் தனக்கும் தரணிக்கும் கேடில்லாமல் வாழ்வாங்கு வாழலாம் என்கிறார் மகா யோகி.

இயற்கை உணவுகளும் இறை சார்ந்த வாழ்வும்….

ஆதிகாலத்தில் நம் மூதாதையர்கள் அதிகமாக உடல் உழைப்பினை செய்தார்கள் தமக்கான உணவினை தாமே இயற்கை முறையில் உற்பத்தி செய்தார்கள் தன் நிறைவுடனும் நோயற்ற நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்தார்கள் ஆனால் தற்போது பல வைத்தியசாலைகள் வைத்தியர்கள் நவீன உபகரணங்கள் என அனைத்து வசதிகள் இருந்தும் மனிதர்களால் நோயற்ற வாழ்வினை வாழ முடிவதில்லை தாம் அடைந்த செல்வத்தினை அனுபவிக்கவும் இயலவில்லை இவற்றிற்கான காரணங்களை மேலும் பார்ப்போம்.

உடல் உழைப்பின் மூலமும் அவர்கள் உட் கொண்ட உணவுகள் மூலமும் அதிலும் அதிகமாக அவர்கள் காய் கறிகள், மரக்கறி உணவுகள், பழங்கள், பால், தேன், தயிர், நெய் போன்ற உயிர்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளையே உண்டார்கள் அதிலும் தம் உணவுகளிலே மஞ்சள், சீரகம், கடுகு, இஞ்சி, பூண்டு போன்ற மூலிகை குணம் நிரம்பிய பொருட்களை சேர்த்திருந்தார்கள் அது மாத்திரமில்லாமல் உயிர்ச் சத்து நிரம்பிய சுத்தமான அருவிகள், ஆறுகள், கிணறுகளில் இருந்து நீரினை பெற்று பருகினார்கள் இவ்வாறு அவர்கள் முழு வாழ்வுமே இயற்கை சார்ந்ததாகவே காணப்பட்டதனால் நீண்ட ஆயுளுடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ்ந்து அதனை தன் சார்ந்த சமூகத்திற்கும் அறிவுறுத்தி சென்றார்கள்.

ஆனால் இன்றோ தொழில் நுட்ப வளர்ச்சி நாகரீக முன்னேற்றம் என பல பரிணாம வளர்ச்சியினை அடைந்த மனித சமுதாயம் நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையினை புறக்கணித்து விட்டு இயற்கையினை எதிர்த்துக் கொண்டுமே இந்த வளர்ச்சியினை எட்டியுள்ளது என்பது தெளிவாகிறது.

உதாரணத்திற்கு அன்றைய நாட்களில் தினமும் உணவினை புதிதாகவே சமைத்து உண்டார்கள் ஆனால் இன்றோ குளிர்சாதன பெட்டிக்குள் மாதக்கணக்காக வைத்துக் கொண்டு அவ்வுணவுகளில் உள்ள உயிர்ச் சக்தி அழிக்கப்பட்ட பின் இராசாயன உணவினையே உலகில் 99% மனிதர்கள் உண்கிறார்கள் அது மாத்திரமா அவர்கள் தாகத்திற்கென குடிக்கும் நீர்கூட பிராண சக்தி இழந்த இராசாயனம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரினையே அருந்துகிறார்கள் இதனை சோதனை செய்து பார்ப்பதானால் அந்த நீரினுள் உயிருள்ள வளர்ப்பு மீன்களை போட்டுப்பாருங்கள் அவைகள் இறந்து விடும் ஏனெனில் பிராண சக்தி அந்த நீருக்குள் சுத்தமாக இருக்காது இவ்வாறு உண்ணும் உணவுகள் அனைத்துமே இராசாயனம் கலக்கப்பட்ட இராசாயன உலகில் மனிதர்கள் வெறும் இயந்திர மனிதர்களாக வாழ்கிறார்கள்.

இந்த இரசாயன இயந்திர உலகில் அனைத்துமே நல்லதாக காண்பிக்கப்பட்டாலும் அவற்றின் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுகிறது இவ்வாறு மனித சமுதாயம் துன்பம் நிறைந்த வாழ்வினை தனதாக்கிக் கொண்டுள்ளது ஆனாலும் தம் துன்பத்துக்கு தாமே காரணமாக உள்ளோம் என்பதனை மறந்து பிறரை நோக்கி விரல்களை காண்பித்துக் கொண்டிருப்பது வேடிக்கையான ஒன்றாகிறது.

இவ்வாறான இயந்திர தன்மையினால் மனித இயல்பு முற்றிலும் வேறுபட்டு மனதிலே தர்ம சிந்தனை மறைந்து கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய குணங்கள் மனிதர்களை ஆட் கொண்டு வழி நடாத்துவதாலும் பேரழிவுகளை இவ்வுலகம் சந்தித்துக் கொண்டிருப்பது மாத்திமல்லாமல் அழிவுப்பாதையினை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார் மகா யோகி.DSC 0093

மனித சமுதாயம் எதிர் கொள்ளும் இவ்வாறான தொற்று நோய்களில் இருந்தும் துர்ப்பாக்கிய நிலையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் மேலும் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை பார்ப்போம்….

எப்போதும் அதிகாலையில் விழித்தெழும் எந்த மனிதர்களையும் இலகுவில் எந்த நோய்களும் தாக்குவது கிடையாது ஏனெனில் அதிகாலை வேளையில் பிராண சக்தியானது எந்த தடைகளும் இன்றி நேரடியாக பூமிக்கு கிடைக்கிறது என்பதாகும் அதனாலேயே நம் மூதாதையர்கள் அதிகாலையில் துயில் எழுந்தார்கள் தம் கடமைகளை செவ்வனே ஆற்றினார்கள்.

குறைந்த பட்சம் புலால் மற்றும் மாமிச உணவுகள் உண்பதனை குறைத்துக் கொண்டு அல்லது முற்றாக நிறுத்தி விட்டு இயற்கை உணவுகளான காய்கறிகள், பழங்கள், பால், தயிர், நெய் போன்றவற்றினை உண்பதனை அதிகரித்துக் கொள்ளலாம்.

இயற்கை உணவான தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய்யினை இட்டு வீட்டில் தினம்தோறும் அகல் விளக்கேற்றலாம் ஏனெனில் அவற்றிலிருந்து வீசும் மணம் காற்றிலே படிந்துள்ள மாசுக்களையெல்லாம் அகற்றி காற்றினை வடிகட்டி எமது சுவாசத்திற்குமாக சுத்தமான பிராண வாயுவினை வழங்குகிறது.

கற்பூரவள்ளி, தூதுவளை, துளசி போன்றவற்றை ஒன்றாக பாத்திரமொன்றில் இட்டு சிறிது நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்த பின்னர் அந்த நீரினை வடிகட்டி காலையும் மாலையும் சிறிது அருந்தி வர வேண்டும் அதன் போது உடலில் உள்ள சளியானது வெளியேற்றப்பட்டு தடிமன் இருமல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

கீழ்காய் நெல்லி, வேப்பிலை இரண்டையும் பாத்திரமொன்றில் சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் காலையும் மாலையும் சிறிது அருந்தி வர அல்லது வாயினுள் சிறிது நேரம் வைத்து வாய் அலம்பி வரும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கப்படும்.

கல்லுப்பு, சுத்தமான மஞ்சள் பொடியினையும் பாத்திரமொன்றில் இட்டு சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வாயினுள் சிறிது நேரம் அந்த நீரினை வைத்து வாயினை அலம்பலாம் இவ்வாறு காலையும் மாலையும் செய்து வர வாய் மூக்கு போன்றவற்றினூடாக பரவக்கூடிய நோய்த் தொற்றுக்களை தவிர்க்கலாம்.

வேப்பிலை, மஞ்சள், வெண் நொச்சி  இலை , துளசி இவற்றில் ஏதாவது ஒன்றை பாத்திரமொன்றில் இட்டு அளவாக நீர் நிரப்பி மூடி வைத்து நன்றாக அடுப்பில் வைத்து கொதித்த பின்னர் அதனை ஆவி பிடிக்கலாம் இதனை தடிமன் அறிகுறி உள்ளவர்கள் கடைப்பிடித்தால் சிறந்த பலனை தரும்.

அதே வேளை குழந்தை பருவத்திலிருந்தே அதிகமாக நாம் வீட்டில் மிளகு தண்ணி எனும் மூலிகைகள் அடங்கிய கூட்டினை உண்டு வளர்ந்திருக்கிறோம் அது எந்த நோயினையும் எதிர்த்து போராடும் திறனை எமது உடல்களுக்கு நிட்சயம் வழங்கும்  அதனால் மனதில் இருக்கும் பயத்தினை விடுத்து மனத் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இவற்றை முறையாக கைக்கொண்டு வந்தாலே போதுமானது.

கொய்யா இலை, மா இலைகளை பாத்திரமொன்றில் இட்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரினை வடிகட்டி காலையும் மாலையும் சிறிது குடித்து வரலாம் அல்லது வாயினை அலம்பலாம் அல்லது கொய்யா இலையினை வாயிலிட்டு மென்று விழுங்கலாம் இதுவும் தொற்று நோய்களை தடுப்பதற்கானதும் உடலில் காணப்படும் நச்சுத்தன்மைகளை அகற்றவும் உதவுகிறது.

மிளகு ரசம், தட்டூறல் (இஞ்சி, மிளகு, பூண்டு, செத்தல் மிளகாய், ஓமம், சீரகம், கறிவேப்பிலை) போன்ற மூலிகை குணம் பொருந்திய ரசத்தினை அருந்துவதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நவரசங்கள் நிறைந்த ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுதல், வீட்டு கதவு நிலைகளில் மஞ்சள் பூசுதல், சாம்பிராணி அதனோடு காய வைத்த வேப்பிலை பொடி மஞ்சள் பொடி போன்றவற்றை இட்டு தினமும் தூபமிட்டு வந்தால் அது மாசு பட்ட காற்றினை சுத்தம் செய்து பிராண வாயுவினை அதிகமாக பெறுவதற்கும் பிராண சக்தி வலுவடைந்து நோய் எதிர்ப்பு ஆற்றலினை தூண்டி விடக்கூடியது இவ்வாறான மேன்மையான பல விடயங்களையும் நம் முன்னோர்கள் தொற்று நீக்கிகளாக தினமும் தம் வாழ்வில் கடைப்பிடித்தவற்றை எமக்கும் விட்டுச் சென்றுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்துக் கொண்டு தினமும் அதிகாலையில் துயில் விட்டு எழுந்து காலைக் கடமைகளை முடித்து விட்டு தத்தம் இறை வழிபாடுகளையும் அந்த இறை பிரார்த்தனையின் போது சக்திவாய்ந்த உயர் அதிர்வலைகளை தன்னகத்தே கொண்ட வேதங்களில் மகா மந்திரங்களாக போற்றப்படும் காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருந்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் 09 முறையோ அல்லது 21 முறையோ உச்சரித்து ஜெபம் செய்து கண்களை மூடி அதிகாலை மாலை வேளைகளில் உங்கள் இஸ்ட தெய்வத்தினை நினைத்து தியானித்து வருவீர்களேயானால் எந்த நோய்களோ, பில்லி, சூனியங்களோ, பிரம்மராட்சசன் எனும் தீர்க்க இயலாத கொடிய நோய் கூட உங்களை அணுகாது காத்திட இவ்விரு மந்திரங்களின் உயர் அதிர்வலைகள் மனதிலே குடியிருக்கும் பயத்தினையும் பதற்றத்தினையும் போக்கி மன தைரியத்தினையும் மன அமைதியினையும் தெளிவினையும் நல்கும் என்பது திண்ணம்.

இவ்வாறெல்லாம் மக்களுக்கு எதுவும் ஏற்படக்கூடாதென்பதற்காகவே பல ஆன்மீக விடயங்களை பல வருடங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் இணையத்தளங்கள் வாயிலாக ஆன்மீக கட்டுரைகள் ஊடாகவும் சுவாமிகள் மக்களுக்கு அருளியுள்ளார் மேலும் அருளிக் கொண்டேயிருக்கிறார் எனவே ஜாதி, இன, மொழி, மத பேதங்களை கடந்து இவ்வாறான நல்ல விடயங்களை கடைப்பிடிப்போமேயானால் அந்த நல்ல விடயங்கள் நம்மை நல் வழியில் பயணிக்க செய்து நல் வாழ்வினை தந்தருளும்

இவற்றை தவறாமல் பின்பற்றி வரும் போது நோய்ப்பிணிகளும் பசிப்பிணிகளும் மெல்ல மெல்ல குறைவடைந்து பிராண சக்தியான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மனிதர்களது வாழ்க்கை இன்பமயமானதாக மாறி விடும் என்றுரைக்கிறார் சுவாமிகள்.

இவ்வாறு மனிதர்கள் எதிர் நோக்கும் அனைத்து விதமான பிணிகளுக்கும் காரணம் அவர்களது ஆத்ம சக்தியான பிராண சக்தி பலம் குன்றியுள்ளது அதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு ஏற்படும் நோயினை எதிர்த்து செயலாற்றும் திறன் அற்றிருப்பதால் தம் உடல் சார்ந்த நோய் எதிர்ப்பிற்கும் மனம் சார்ந்த தெளிவு நிலைக்குமாக இயற்கை சார்ந்த வாழ்வினை மனிதன் கடைப்பிடிக்கும் போது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக வாழுவான்.

வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் போது யுகம் யுகமாக ஏதோ ஒரு விதத்தில் மனித குலம் பல நோய்களை, பல சவால்களை எதிர் கொண்டும் அவற்றிலிருந்து மீண்டும் முன்னேறி வந்துள்ளது ஆகவே தற்போது மனித குலத்திற்கு சவால் விடுக்கும் தொற்று நோய் தாக்கத்திலிருந்து  விடுபட மக்கள் அனைவருமே இறை சார்ந்தும் இயற்கை சார்ந்தும் வாழ முற்பட வேண்டும் அவ்வாறு வாழும் பட்சத்தில் மனித இனமும் இவ் உலகும் முழுமையாக காப்பாற்றப்படும் என்கிறார் ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”DSC 0637

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -