Home Cinema நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்.. தெறிக்கும் வாழ்த்துக்கள்!

நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்.. தெறிக்கும் வாழ்த்துக்கள்!

நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் தனக்கென ஒரு புதிய பாணியை அமைத்துக் கொண்டு இன்று வரை திரைப்படங்களில் கலக்கி வரும் நடிகை அமலாபால் அதே நேரத்தில் ட்ரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.amala1 1603693965

இவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது புகைப்படங்களும் இணையதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருவதால் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் அமலாபால் அக்டோபர் 26 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் என பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.amalapaul11 1603694145

கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட அமலாபால் மலையாளத்தில் வெளியான “நீலத்தாமர” என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இவ்விரு திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுக்காத நிலையில் மிக நீண்ட மாற்றங்களுக்கு பிறகு பிரபல நடிகை கடைசி சமயத்தில் அவர் பின் வாங்க, மைனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமலாபாலுக்கு கிட்டியது.amala paul 454 1602923065

கிடைத்த வாய்ப்பை சாதுர்யமாக பற்றிக்கொண்ட அமலாபால் மைனா திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தார். மிகக் குறைந்த செலவில் எர்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவாகி இருந்த மைனா திரைப்படம் சக்கை போடு போட்டு திரையரங்களில் வசூலை வாரி குவித்தது.

மைனா திரைப்படம் அமலாபாலுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர் பிரபு சாலமனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மைனா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அமலா பாலுக்கு தொட்டதெல்லாம் வெற்றி போல தொடர் வெற்றித் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக முன்னணி நடிகையாக முன்னேறினார்.amala3 1603693957

தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை என தொடர் வெற்றி திரைப்படங்களில் தமிழில் நடித்து வந்த அதே சமயம் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல மெகா ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அங்கும் பிரபலமா நடிகையாக வலம் வந்தார்.

இவ்வாறு குடும்பப்பாங்கான அனைவரும் ரசிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அமலாபால் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது திரைப்படமான ஆடை திரைப்படத்தில் பல காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில் சர்ச்சைகளுக்கு நடுவிலும் ஆடை திரைப்படம் வெற்றி பெற்று கோலிவுட்டே கொண்டாடியது.amala34 1603693949

இவ்வாறு தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கலங்க வைத்து வரும் அமலா பால் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது படங்களுக்கு இணையாக இணையதளத்தில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களும் செம ஹாட்டாக இருப்பதால் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வேற லெவல் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கிடையில் அதோ அந்த பறவை போல, லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழ் ரீமேக், ஆடுஜீவிதம், காடவர் மற்றும் ஒரு சில வெப்சீரிஸ் உள்ளிட்டவைகளில் அமலா பால் படு பிஸியாக நடித்து வருகிறார்.amala345 1603693938

இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் தனக்கென ஓர் நிரந்தர இடத்தை உருவாக்கிக்கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் “ட்ரெண்டிங் நாயகி” அமலா பாலுக்கு அக்டோபர் 26 ஆம் தேதியான இன்று பிறந்தநாளையொட்டி வருகிறார். திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில் இவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

amala4 1603694137

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -