Home Lifestyle மனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி!

மனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி!

இந்த கறிவேப்பிலை குழம்பு செய்வதற்கு எளிமையானது மட்டுமல்ல உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது புளிக்குழம்பு போல இந்த கறிவேப்பிலை குழம்பையும் அதிகளவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் இதில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, மனஅழுத்தத்தைக் குறைத்து, இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்கிறது.Curry leaves kolambu resized

இந்த ஆரோக்கியம் மற்றும் சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்வதற்குத் தேவையான பொருள்கள்

கறிவேப்பிலை – 2 கப்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு

உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6 – 8

தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கு

நெய் அல்லது எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

வறுத்து அரைப்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதனோடு, ஃபிரெஷ் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை இந்தக் கலவையை சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலந்து, நன்கு கொதித்து உங்களுக்குத் தேவையான பதம் (அடர்த்தியாகவோ கொஞ்சம் நீர் நிலையிலோ) வந்தபிறகு இறக்கிவிடலாம். வித்தியாசம், சுவை மற்றும் ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை குழம்பு தயார். புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்த குழம்பைச் செய்யலாம்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -