Home Lifestyle மாதவிடாயை தள்ளிப்போட செய்வது சரியா? விளைவுகள் என்ன?

மாதவிடாயை தள்ளிப்போட செய்வது சரியா? விளைவுகள் என்ன?

வீட்டில் முக்கியமான பூஜை, பண்டிகை, திருமணம் போன்ற முக்கிய நாட்களில் மாதவிடாய் வருகிறது எனில் அதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். இதற்காக மாத்திரைகளும் கிடைக்கின்றன ஆனால் இதை அடிக்கடி செய்வோரும் சிலர் உள்ளனர். இப்படி மாதவிடாயை தள்ளிப்போடச் செய்வது சரியா..?periods

மருத்துவ அடிப்படையில் பார்த்தால் தள்ளிப்போடுவது சரி என்கிறது சிலர் மாதவிடாயை தள்ளிப்போடவும், அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் இந்த மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.

இந்த மாத்திரைகள் ஹார்மோன்களின் செயலை கட்டுப்படுத்துகின்றன 28 நாட்களில் வரக்கூடிய மாதவிடாயை கட்டுப்படுத்த கருப்பையின் வேலையை கட்டுப்படுத்துகிறது இதனால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகும்.periods pain stomach

இந்த மாதவிடாய் தள்ளிப்போன பிறகு வரும் மாதவிடாய் உதிரப்போக்கு சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு வழக்கத்தைவிட குறைவாக இருக்கலாம் ஆனால் இந்த மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளுதல் தவறு அதேபோல் இந்த மாத்திரைகளை உட்கொள்வோருக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்னை உள்ளது, மாத்திரைகளை தினம் உட்கொண்டு வருகிறீர்கள் எனில் மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடக்கூடாது.

அதேபோல் இந்த மாதவிடாய் தள்ளிப்போகும் மாத்திரைகள் எல்லோருக்கும் ஏற்புடையதாகவும் இல்லை எப்போது சாப்பிட்டால் மாத்திரை வேலை செய்யும் என்கிற வரைமுறைகளும் உள்ளன எனவே அதற்கு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.women health vagina periods 1

 

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -