Home International அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியானார் ஏமி கோனி!

அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியானார் ஏமி கோனி!

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏமி கோனி பாரெட்டின் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ஆம் திகதி உயிரிழந்தாா்.

இதையடுத்து காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்தாா். உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஜனாதிபதி ட்ரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இத்தகைய சூழலில், செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தது.

இந்நிலையில், 48 வயதான அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் பதவியேற்றார்.amy2345 78900

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -