Home International ஆபத்தான நிலையில் இருக்கும் இலங்கை சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலை- அழுத்தம் கொடுக்கும் பாடசாலை!

ஆபத்தான நிலையில் இருக்கும் இலங்கை சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலை- அழுத்தம் கொடுக்கும் பாடசாலை!

மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன் தொடர்பிலே, செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துஷா கமலேஸ்வரன் பாடசாலைக்கு திரும்புவது மேலும் தாமதமானால், அபராதம் செலுத்த நேரிடும் என அவரது பெற்றோரையும் குறித்த பாடசாலை நிர்வாகம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதாக இருக்கும் போது துஷா கமலேஸ்வரனுக்கு மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதில், அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன், எழுந்து நடக்க முடியாத வகையில் செயலற்ற நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைக்குஅமைய துஷா தமது வீட்டில் இருந்தே கல்வி பயின்று வருகிறார்.

இந்த நிலையில் எசெக்ஸ், இல்ஃபோர்ட் பகுதியில் செயல்பட்டுவரும் செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம், துஷாவை பாடசாலைக்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த சிறுமியின் பெற்றோருக்கும் அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்துள்ளது.

துஷா தொடர்பில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பி.ஜே.சுரேஷ் அளித்த கடிதத்தை ஏற்க மறுத்த பாடசாலை நிர்வாகம், அந்த கடிதத்தில் போதிய தகவல் இல்லை என நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் சுரேஷ், பாடசாலை நிர்வாகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியும், பலனளிக்கவில்லை என துஷாவின் சகோதரர் துசன் தெரிவித்துள்ளார்.

எனினும், துஷா கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கு திரும்பியுள்ளதாகவும், ஆனால் பாதுகாப்பற்றதாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.700.160.90 2 625.0.560.350.160.300.053.800.700.160.90 3 625.0.560.350.160.300.053.800.700.160.90 4 625.0.560.350.160.300.053.800.700.160.90

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -