இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் விஐயமானது சீனா – இலங்கைக்கு இடையில் இருந்து வரும் நட்புறவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலானது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேறு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவுகள் தொடர்பான இலங்கையின் நீண்டகால நண்பன் என்ற வகையில் அதனை பாராட்டுகிறோம்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் தனது விஜயத்தின் மூலம் இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு பொருந்தாத அழுத்தங்களை கொடுக்கக் கூடாது என கோருகிறோம்.
அத்துடன் நிவாரணம் வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த சீன பிரதிநிதிகள் குழுவில் குறைவான நபர்களே இடம்பெற்றிருந்தனர். இது இலங்கைக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டது. சீனாவின் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க இந்த பிரதிநிதிகள் இலங்கை வந்தனர்.
சிறிய நாடுகளுடன் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் போது அமெரிக்காவுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள சீனா தயாராக இருக்கின்றது. எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில் இந்த விஐயம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்குள் வீதி கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருந்தினர் ஒருவர் வரும் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கௌரவம் கிடைக்கும்.
அத்துடன் அமெரிக்காவில் தற்போது சுமார் 8 மில்லியன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை மரணித்துள்ளனர்.
தொற்று நோய் பரவலை எதிர்நோக்கி இருக்கும் இலங்கைக்குள் ராஜாங்க செயலாளர் வருவதற்கு முன்னர் வேறு குழு ஒன்று வந்தமை பிரச்சினைக்குரியது எனவும் சீனத் தூதரகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.